50வது சதத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என, சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

டெஸ்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த சாதனை குறித்து சச்சின் தெண்டுல்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சாதனையை நினைத்து கொண்டு நான் ஒரு போதும் ஆடுவதில்லை. 50 என்பது இன்னொரு சாதாரண நம்பர் தான். ஆனால் இந்த முக்கியமான தருணத்தில் சதம் அடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டிசம்பர் 18ம் தேதி எனது தந்தையின் பிறந்த நாள். எனவே இந்த சதத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை என்னால் விவரிக்க உண்மையிலே வார்த்தைகள் இல்லை' என்றார். இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியுமா? என்ற கேட்ட போது  நல்லதே நடக்கும் என்று நம்பக்கூடியவன் நான்.

தற்போது வைத்திருக்கும் இந்த பேட் மூலம் ஒரு நாள் போட்டி இரட்டைசதம் உள்பட 12 சதங்களை தெண்டுல்கர் அடித்திருக்கிறார்.
நல்ல விஷயங்களே நடக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அது போலவே நடக்கும்' என்றார்.

இது பற்றி குறிப்பிட்ட தெண்டுல்கர்,  இந்த பேட் எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த அதிர்ஷ்டம். இந்த பேட்டை வைத்து நான் பேட்டிங் செய்யும் போது என்னை அவுட் செய்வது கடினம் என்று நான் உணருகிறேன் என்றார்.


தெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  இது ஒரு அற்புதமான சாதனை. ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் பிரதமர் மன்மோகன்சிங், இது வியப்பூட்டும் சாதனை என்று பாராட்டியுள்ளார்.
ஐ.சி.சி. தலைவர் சரத்பவார்,  தெண்டுல்கர் எடுக்கும் ஒவ்வொரு ரன்களும் சாதனை தான். நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகுக்கு அவர் நிரூபித்து இருக்கிறார்' என்றார். 


இந்த சாதனையை எந்த வீரரும் நெருக்க முடியாது என்று முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.  உலக கிரிக்கெட்டின் கடவுள் தெண்டுல்கர் என்று தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் வர்ணித்தார். இதே போல் முன்னாள் வீரர்களும், பிரபலங்களும் தெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். 

0 comments:

Post a Comment