God of Cricket - சச்சின் டெண்டுல்கரின் - தலை சிறந்த 5 டெஸ்ட் சதங்கள்
சச்சின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். விரைவில் அவருக்கு பாரத ரத்னா கிடைக்க வாழ்த்துவோம். தனது 20 வருட கிரிக்கெட் வரலாற்றில் , கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்தவர். இவரது விக்கெட்டை வீழ்த்துவது எதிர் அணியினருக்கு ஒரு கனவு. அவரது தலை சிறந்த 5 சதங்களை , ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாத மிகச் சிறந்த சதங்களை இங்கே பதிவு செய்வதில் எமது இணைய தளம் பெருமை கொள்கிறது.
![King Of Cricket Sachin Tendulkar](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uaLccXitvQ8AYrshU2S0eQQ7PSMhItcWs2V0WpBQAL54OvE0tML4iIIWVrKCSoUPZEQGkEAimfb9XtHhbozGj9qaZovi58mvxkt4k_S2U6BcKNFjL1-rrbJxQ-VZShqL969OVN0ndxl7St5aEdfBsmt5jOCRPITW17G-eN1OQ6Yg=s0-d)
1. 114 Runs , at Perth, 1992; - சச்சினின் மூன்றாவது சதம் . என்னுடைய மிகச் சிறந்த சதம் என்று சச்சினே குறிப்பிட்டது. மேக் டேர்மாட் , விட்னி, மெர்வ் ஹியுஸ், என்று அந்தக் காலத்தின் தலை சிறந்த ஆஸ்திரேலியா பவுலர்கள், பறந்து , பறந்து பந்தை வீச இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சச்சின் இறங்கிய பிறகும் பந்து பறந்தது, ஆனால் பேட்டில் பட்டு. சச்சின் வரும்போது ஸ்கோர் : 69 /2 . ஆனால் அடுத்த 90 ரன்களுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் காலி. அதன் பிறகு நடந்தது - சரித்திரம். கிரண் மோர் , சச்சின் இணை இந்த இன்னிங்ஸில் கலக்கியது. ஆனால் இந்தியா அந்த மாட்சை பரிதாபமாக தோற்றது.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
![Sachin Tendulkar overcomes the challenges of a fast WACA pitch Sachin Tendulkar overcomes the challenges of a fast WACA pitch](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vhZ4ZyNm6B5QkYdHa8Sftue2Xk2qDwjLkqhRcBm4vSJjPHWPul5s6Bg40rJi_fETH2RJelFdOtm1-zEAVWNyXAhsrdsnL2cvhuUfs-ROZuDxlXT4HTgJukNtVtRjk3JA=s0-d)
2. 111 Runs at Johannesburg, 1992; - நான்காவது சதம். : இந்திய அணியின் முதல் தென் ஆப்ரிக்கா டூர் - டொனல்ட், மேத்யூஸ், மேக் மிலன், ஹன்சி குரோனே என்று மிகச் சிறந்த பவுலிங் அட்டாக். சச்சினை சாதாரண வீரர்களில் இருந்து , தனியே அடையாளம் காண வைத்த மேட்ச். ஆலன் டொனால்டின் அற்புதமான பந்து வீச்சு , சச்சின் என்னும் மா மேதையின் பேட்டிங் நுணுக்கங்களை உலகறிய வைத்த இன்னிங்ஸ். அடுத்த பெரிய ஸ்கோர் கபிலின் 25 ரன்கள்தான். இந்த மேட்ச் டிரா ஆனது.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
3. 122 runs at Birmingham, 1996; ஒன்பதாவது சதம். இங்கிலாந்து அணியிடம் இந்தியா செம அடி வாங்கிய மேட்ச். ஆனால் ஒட்டு மொத்த உலக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சச்சினின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ். கிரிஸ் லூயிஸ், டொமினிக் கார்க், ஆலன் முல்லாலி என்று ஒரு டீமே இந்திய அணியை பந்தாடிய மேட்ச். ஆனால் அதனை பேரின் பந்து வீச்சும் த்வம்சம் செய்யப்பட்டது சச்சினால். இந்த இன்னிங்க்ஸில் சச்சின் தவிர அடுத்த பெஸ்ட் ஸ்கோர் தெரியுமா..? வெறும் 18 .(மஞ்ச்ரேகர்).அப்படினா அந்த பிட்ச் எப்படி இருந்தது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
4. 155 runs - not out at Chennai, 1998; பதினைந்தாவது சதம் . வார்னே - சச்சினின் யுத்தத்தை உலகமே ஆவலுடன் எதிர் நோக்கிய மேட்ச். அசார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பந்தாடிய மேட்ச். முதல் இன்னிங்ஸில் சச்சின் விக்கெட்டை வார்னே கைப்பற்ற , இரண்டாவது இன்னிங்ஸ் இல் வார்னேயை முழி பிதுங்க வைத்தார். அந்த மேட்ச்க்குப் பிறகு வார்னே - பழைய வார்னே யாக இல்லை என்பது மட்டும் உண்மை.மரண அடி.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
![Sachin Tendulkar is delighted after scoring his century Sachin Tendulkar is delighted after scoring his century](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sp8dFni-kQrryCuV-cALlUF2PylqVDzbNJ0ZQVW_1yTyEc7KzJ5nrqX0ayDw-lUzP6dc0MAZ7BzID7GDAa9fWyJAcC4ByVWdaGy_BlK9YP2Er63TWiz_eF1dz0Mx0=s0-d)
5. 103 runs not out at Chennai, 2008; நாற்பத்தியோரவது சதம். இங்கிலாந்து அணிக்கு எதிராக காப்டன் டோனி தலைமையில் இந்தியா ஒரு இமாலய ஸ்கோரை ( 387 ரன்கள் ) சேஸ் செய்த மேட்ச் .டெண்டுல்கர் இந்த சதத்தை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தார். ஹார்மிசன், ஆண்டெர்சன், பிளின்டாப், பனேசர் என்று நான்கு சிறந்த பவுலர்கள் கொண்ட அணியை , சச்சினின் பேட் வெளுத்து வாங்கியது.சேவாக் நல்லதொரு அடித்தளத்தை அமைத்தாலும், VVS லக்ஷ்மன் அவுட் ஆனபோது இன்னும் 163 ரன்கள் தேவைப்பட்டது. சச்சின் நிலைத்து நிற்பதுடன் வெற்றிக்கும் அழைத்து செல்லவேண்டிய கட்டாயம்.யுவராஜ் ஒரு முனையில் கை கொடுக்க இந்தியா அனாயசமாக வெற்றி கொண்டது. இந்த மாட்ச்சில் இருந்து இந்திய அணியின் பீடு நடை உலகின் தலை சிறந்த அணியாக இந்தியாவை மாற்றத் தொடங்கியது.
சச்சின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். விரைவில் அவருக்கு பாரத ரத்னா கிடைக்க வாழ்த்துவோம். தனது 20 வருட கிரிக்கெட் வரலாற்றில் , கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்தவர். இவரது விக்கெட்டை வீழ்த்துவது எதிர் அணியினருக்கு ஒரு கனவு. அவரது தலை சிறந்த 5 சதங்களை , ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாத மிகச் சிறந்த சதங்களை இங்கே பதிவு செய்வதில் எமது இணைய தளம் பெருமை கொள்கிறது.
1. 114 Runs , at Perth, 1992; - சச்சினின் மூன்றாவது சதம் . என்னுடைய மிகச் சிறந்த சதம் என்று சச்சினே குறிப்பிட்டது. மேக் டேர்மாட் , விட்னி, மெர்வ் ஹியுஸ், என்று அந்தக் காலத்தின் தலை சிறந்த ஆஸ்திரேலியா பவுலர்கள், பறந்து , பறந்து பந்தை வீச இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சச்சின் இறங்கிய பிறகும் பந்து பறந்தது, ஆனால் பேட்டில் பட்டு. சச்சின் வரும்போது ஸ்கோர் : 69 /2 . ஆனால் அடுத்த 90 ரன்களுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் காலி. அதன் பிறகு நடந்தது - சரித்திரம். கிரண் மோர் , சச்சின் இணை இந்த இன்னிங்ஸில் கலக்கியது. ஆனால் இந்தியா அந்த மாட்சை பரிதாபமாக தோற்றது.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
2. 111 Runs at Johannesburg, 1992; - நான்காவது சதம். : இந்திய அணியின் முதல் தென் ஆப்ரிக்கா டூர் - டொனல்ட், மேத்யூஸ், மேக் மிலன், ஹன்சி குரோனே என்று மிகச் சிறந்த பவுலிங் அட்டாக். சச்சினை சாதாரண வீரர்களில் இருந்து , தனியே அடையாளம் காண வைத்த மேட்ச். ஆலன் டொனால்டின் அற்புதமான பந்து வீச்சு , சச்சின் என்னும் மா மேதையின் பேட்டிங் நுணுக்கங்களை உலகறிய வைத்த இன்னிங்ஸ். அடுத்த பெரிய ஸ்கோர் கபிலின் 25 ரன்கள்தான். இந்த மேட்ச் டிரா ஆனது.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
3. 122 runs at Birmingham, 1996; ஒன்பதாவது சதம். இங்கிலாந்து அணியிடம் இந்தியா செம அடி வாங்கிய மேட்ச். ஆனால் ஒட்டு மொத்த உலக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சச்சினின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ். கிரிஸ் லூயிஸ், டொமினிக் கார்க், ஆலன் முல்லாலி என்று ஒரு டீமே இந்திய அணியை பந்தாடிய மேட்ச். ஆனால் அதனை பேரின் பந்து வீச்சும் த்வம்சம் செய்யப்பட்டது சச்சினால். இந்த இன்னிங்க்ஸில் சச்சின் தவிர அடுத்த பெஸ்ட் ஸ்கோர் தெரியுமா..? வெறும் 18 .(மஞ்ச்ரேகர்).அப்படினா அந்த பிட்ச் எப்படி இருந்தது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
4. 155 runs - not out at Chennai, 1998; பதினைந்தாவது சதம் . வார்னே - சச்சினின் யுத்தத்தை உலகமே ஆவலுடன் எதிர் நோக்கிய மேட்ச். அசார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பந்தாடிய மேட்ச். முதல் இன்னிங்ஸில் சச்சின் விக்கெட்டை வார்னே கைப்பற்ற , இரண்டாவது இன்னிங்ஸ் இல் வார்னேயை முழி பிதுங்க வைத்தார். அந்த மேட்ச்க்குப் பிறகு வார்னே - பழைய வார்னே யாக இல்லை என்பது மட்டும் உண்மை.மரண அடி.
To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்
5. 103 runs not out at Chennai, 2008; நாற்பத்தியோரவது சதம். இங்கிலாந்து அணிக்கு எதிராக காப்டன் டோனி தலைமையில் இந்தியா ஒரு இமாலய ஸ்கோரை ( 387 ரன்கள் ) சேஸ் செய்த மேட்ச் .டெண்டுல்கர் இந்த சதத்தை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தார். ஹார்மிசன், ஆண்டெர்சன், பிளின்டாப், பனேசர் என்று நான்கு சிறந்த பவுலர்கள் கொண்ட அணியை , சச்சினின் பேட் வெளுத்து வாங்கியது.சேவாக் நல்லதொரு அடித்தளத்தை அமைத்தாலும், VVS லக்ஷ்மன் அவுட் ஆனபோது இன்னும் 163 ரன்கள் தேவைப்பட்டது. சச்சின் நிலைத்து நிற்பதுடன் வெற்றிக்கும் அழைத்து செல்லவேண்டிய கட்டாயம்.யுவராஜ் ஒரு முனையில் கை கொடுக்க இந்தியா அனாயசமாக வெற்றி கொண்டது. இந்த மாட்ச்சில் இருந்து இந்திய அணியின் பீடு நடை உலகின் தலை சிறந்த அணியாக இந்தியாவை மாற்றத் தொடங்கியது.
0 comments:
Post a Comment