நவீனத்துவத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்ற சச்சின் டெண்டுல்கரின் கருத்துக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.


ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாக நீடிக்க அதில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் பட்ஸ்மன் சச்சின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பி@ரரணை ஒன்றினை முன்வைத்தார். எனினும் இதற்கு ஐ.சி.சி. யினால் உடனடியாகவே மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பியன் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக சென்னை சென்றுள்ள மலிங்க சச்சினின் கருத்துக்கு அதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 25 ஓவர்கள் என தலா 2 இன்னிங்ஸ்களாக மொத்தம் 4 இன்னிங்ஸ் வைத்து போட்டியை நடத்த வேண்டுமென்ற சச்சினின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
பந்து வீச்சாளர் என்ற முறையில் தற்@பாதுள்ள விதிப்படி 34ஆவது ஓவரில் பந்தை மாற்றுவதை நான் ஏற்கவில்லை. 4 இன்னிங்ஸ் விளையாடினால் பந்தை பலமுறை மாற்ற வாய்ப்பு கிடைக்கும். இது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை சச்சினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அணியின் ராகுல் டிராவிட், இக் கருத்தை ஐ.சி.சி. நிராகரித்தது ஏன் என தெரியவில்லை என தெரிவித்தார்.

0 comments:

Post a Comment