“கிரிக்கெட் உலகில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், “நவீன பிராட்மேனாக’ திகழ்கிறார்,” என, முன்னணி வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் தோனி, “கிழக்கும், மேற்கும் சந்திக்கின்றன’ என்ற விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். லண்டனின் “ஹில்டன் பார்க்’ என்ற இடத்தில் நடந்த இந்த விருந்தில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா, சச்சின் குறித்து கூறியது:
இந்திய வீரர் சச்சின், 16 வயதில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். தற்போது 38 வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இவரைப் போல சிறந்த வீரரை இதுவரை கண்டதில்லை. சச்சின் தான் உலகின் சிறந்த வீரர்.
லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின், 100வது சதம் அடிக்க இருப்பதை நேரில் காண உள்ளேன். சச்சின் சிறந்த வீரர் என்றார், அணியின் “பெருஞ்சுவர்’ டிராவிட். இவர் வியக்கத்தக்க வீரர்.
ஸ்டூவர்ட் (இங்கிலாந்து):
கடந்த 1990களில் சிறந்த வீரராக விளங்கியவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா. ஆனால் தற்போதைய கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் இந்திய அணியின் சச்சின், அவரை விட சிறந்தவர். சச்சின் “நவீன பிராட்மேன்’ ஆவார். அதிக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளையாடுவதில் டிராவிட் வல்லவர். எதிர்வரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்.
டிராவிட் (இந்தியா):
இந்தியா பல்வேறு கடவுள்களை கொண்டுள்ளது. இதில் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சினும் ஒரு கடவுளாக திகழ்கிறார்.
0 comments:
Post a Comment