சச்சின் - நம் காலத்து நாயகன்




1930களில் லண்டன் செய்திதாள்களில் “He is Out” என்ற வரி தென்பட்டால் யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி பந்துவீச்சாளர் பிராட்மெனை அவுட் ஆக்கிவிட்டார் என்று மக்கள் புரிந்துகொள்வார்களாம். தொண்ணுறுகளிலும் இந்த நூற்றாண்டிலும் “Another ton for him” என்ற வரி எங்கு தென்பட்டாலும் மிகச்சுலபமாக புரிந்துகொள்ளமுடியும் சச்சின் மற்றொரு சதம் அடித்திருக்கிறாறென்று. இவ்வளவு சதங்களை குவிக்கிறாரே சதம் அடிப்பது மிக எளிதான செயலோ என்று கிரிக்கெட் தெரியாதவர்கள் தவறாக நினைக்கும் அளவிற்கு நூறு ரன்களை சச்சின் மிக எளிதாகவும் அழகாகவும் கடந்து நிற்பார். ஆனால் இதற்கு பின்னாலிருக்கும் உழைப்பும்,அர்ப்பணிப்பும் மிக அதிகம் என்பதை சச்சினை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்வார்கள். கிரிக்கெட்டை மட்டுமே சுவாசமாக கொண்டு வாழ்பவர் சச்சின். 

95 முறை சர்வதேச போட்டிகளில் நூறு ரன்களை கடப்பதென்பது மிகக்கடினம். பல்வேறு மைதானங்கள்,பவுலர்கள்,பிட்சுகள்,சிதோஷ்ண நிலை இவை அனைத்தையும் தாண்டி தன் சாதனை பயணத்தை தொடர்கிறார். அவரது உடலில் காயங்கள் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போவால் பாதிக்கப்பட்டபோது இனி சச்சின் அவ்வளவுதான் என்றார்கள். பீனிக்ஸாக மீண்டு வந்தார்.

கிரிக்கெட் விளையாடும் சர்வதேச வீரர்கள் அனைவரும் எப்படியாவது உலகின் மிகச்சிறந்த "இரண்டாவது" டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்கிற இடத்துக்குத்தான் போட்டியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எப்பொழுதும் முதலிடம் ஒருவருக்குத்தான். அது டான் பிராட்மென். அவரது சராசரியை முறியடிக்க இன்றுவரை எவரும் பிறந்ததாக தெரியவில்லை. மிஸ்டர் கிரிக்கெட் என்று ஆஸி. வீரர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மைக்கேல் ஹஸ்ஸி 80க்கும் மேல் சராசரியுடன் பிராட்மெனை எட்டிப்பிடிக்க ரன்கள் குவித்துகொண்டிருந்தார். உச்சிக்கு ஏறிய வேகத்தில் கீழே இறங்கி அமைதியாகிவிட்டார். 

ஒருநாள் போட்டியில் நம்பர் 1 வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதில் எவ்வித சந்தேகமும் எந்த வீரர்களுக்கும்,ரசிகர்களுக்கும் இல்லை. இன்று மேலும் ஒரு வைரம் அவரது கிரீடத்தில். 39 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியின் பெரும் ஜாம்பவான்களான ரிச்சர்ட்ஸ்,லாரா,கில்கிறிஸ்ட்,மார்க் வா,அன்வர்,ஹெயின்ஸ்,ஜெயசூர்யா,கங்குலி என எல்லோரின் கனவாகவும் இருந்து கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை சச்சின் முதல் வீரனாக தொட்டிருக்கிறார்.

மிகச்சிறந்த அணியான  தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனையாக கொள்ளலாம். ஸ்டெயினும்,பார்னலும் உசுப்பேற்றியபோதும் மெளனமாக இருந்தவர் அவரது மட்டையால் பதிலடி கொடுத்தார். காலீஸின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் அடித்த நான்கு ரன்களை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பாடமாக வைக்கலாம். 194 ரன்கள் கடந்து உலகசாதனை செய்தபோதும் மட்டையை உயர்த்தாமல் அடுத்த பந்தை எதிர்கொள்ள நின்றாரே,போட்டி முடிந்தபின் “இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றாரே. அதுதான் சச்சின்.

36 வயதில் சச்சின் அடிக்கும் மூன்றாவது மிகப்பெரிய சதம் இது(இதற்கு முன் 2009ல் நியுசிக்கு எதிராக 163*,ஆஸிக்கு எதிராக 175) ரன்னர் இல்லாமல் 200 ரன்கள். ஒரு நாள் போட்டிகளில் அதிக  பவுண்டரிகள்(25) என்று சச்சினின்  சாதனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. போட்டியில் எந்த வித தவறும் செய்யாமல் சச்சின் விளையாடியதை பார்த்தபோது கைதேர்ந்த ஓவியனொருவன் மிகவேகமாகவும் நேர்த்தியாகவும் ஓவியம் தீட்டுவதை போலிருந்தது.

சிறிய வயதிலேயே தேசிய அணிக்கு விளையாட வந்துவிட்டதால் சச்சினால் அதிக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கமுடியவில்லை. ஒருவேளை அப்படி பங்கேற்றிருந்தால் பல பந்துவீச்சாளர்களை இந்தியா இழந்திருக்கும். ஜிம்பாவே அணிக்கெதிரான போட்டி ஒன்றில் சச்சின் விக்கெட்டை எடுத்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கும்மாளமிட்டார் ஒலாங்கோ. அடுத்த போட்டியில் அவரது பந்துவீச்சை சச்சின் அடித்த அடியில் ஒலாங்கோ அணியை விட்டே போனார். 

2002ல் சேவாக் புகழின் உச்சியில் இருந்த சமயம். இந்தியாவுக்கு எப்படியும் 2003 உலககோப்பையை அவர் வாங்கித் தந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தபோது பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த உலக கோப்பை போட்டிகள் அனைத்திலும் சேவாக் சோபிக்கவில்லை. உலககோப்பைக்கு முன்புவரை அமைதியாக இருந்த சச்சின் ஒவ்வொரு போட்டியிலும் ருத்ர தாண்டவமாடினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் வாயாடி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்து அதிர செய்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் அடித்த 98 ரன்களை சாகும் வரை பாகிஸ்தான் வீரர்கள் மறக்கமாட்டார்கள் குறிப்பாக அக்தர்.

முப்பது வயதுக்கு மேல்தான் கவாஸ்கர் பல சாதனைகளை குவித்தார்.ஓய்வு பெறும்வரை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ரிச்சர்ட்ஸ். தங்களது கடைசி நாட்களிலும் ரன்களை குவித்தவர்கள் பார்டரும்,ஸ்டீவ் வாக்கும். கடந்த இரண்டு வருடங்களில் சச்சினின் சராசரியும் சதங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இது சச்சினின் “Golden days” என்கிறார்கள் விமர்சகர்கள். அவர் ஓய்வு பெறும் வரை பந்துவீச்சாளர்களின் பாடு திண்டாட்டம்தான். அவரும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவார் என்பதை நினைக்கும்போது விழியோரம் நீர்த்துளிர்க்கிறது. நம் காலத்தின் மகத்தான நாயகன் சச்சின். அவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமைதானே.

பிராட்மென் விளையாடுவதை நேரில் பார்த்ததை தங்களது வாழ்நாளின் பொக்கிஷமாக கருதியவர்கள் உண்டு. அதேபோல் நாம் சச்சின் எனும் மாபெரும் கலைஞனை சாதனையின் சிகரங்களில் அவன் ஏறியபோது உடனிருந்து பார்த்து மகிழ்ந்திருந்தோம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இன்னும் நாற்பது ஆண்டுகள் ஆனாலும் கிரிக்கெட் என்னும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சச்சின் என்கிற பெயர் எழுதப்படாமல் இருக்காது. கார்ரேஸுக்கு ஒரு ஷுமேக்கர்,டென்னிஸுக்கு ஒரு பெடரர்,கிரிக்கெட்டிற்கு ஒரு சச்சின்.விரைவில் சர் பட்டம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

சச்சினிடம் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு விஷயங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. ஒன்று, டெஸ்ட் போட்டியில் இதுவரை சச்சின் 300 ரன்கள் அடித்ததில்லை. இரண்டு, இதுவரை எத்தனையோ கோப்பைகளையும் பதக்கங்களையும் ஸ்பரிசித்த சச்சினின்  கரங்கள் உலககோப்பையை ஸ்பரிசித்ததில்லை. இந்த இரண்டும் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த மிகச்சிறந்த வீரனை  நம் காலத்தின் நாயகனை வாழ்த்துவோம். 

படித்ததில் பிடித்த சச்சின் வாசகம்:

உலகத்தில் இரண்டு வகையான துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகை சச்சின் டெண்டூல்கர். மற்றவகை மிகுதி எல்லாரும்.

சொன்னது அண்டி ஃபிளவர்

" Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives."
தோன்றுபவரெல்லாம் புகழோடு தோன்றுவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்குதான் புகழும் பணமும் வந்து சேரும். அவ்வாறு ஆயிரத்தில் ஒருவர்தான் சச்சின் தெண்டுல்கர். 1989ம் ஆண்டு தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி, 20 ஆண்டுகள் ஆகியும் ஆட்டம் காணாமல் ஸ்டெடியாக ஆடி வருகிறார் இந்த கிரிக்கெட் சூறாவளி!
1973ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சச்சின் தெண்டுல்கர். அவரது தந்தை ரமேஷ் தெண்டுல்கர் ஒரு மராத்தி நாவலாசிரியர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சச்சினுக்கு கிரிக்கெட்டில் அலாதி பிரியம். தாம்தூம் என ஆடி அடிக்கடி அக்கம்பக்கத்து கண்ணாடி ஜன்னல்களை பதம் பார்த்து விடுவாராம் சச்சின். சச்சின் தெண்டுல்கர், ஆரம்பக் காலத்தில், வேகப் பந்து வீச்சாளர் ஆக ஆசைப் பட்டாராம். இதற்காக சென்னை எம்.ஆர்.எஃப் ஃபவுண்டேஷனில் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது, அவரது பயிற்சியாளர் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லீ (Dennis lilee). சச்சின் தெண்டுல்கரின் பந்து வீச்சு, லில்லீயைக் கவரவில்லை. 'நீ ஏன் பேட்டிங்ல கவனம் செலுத்தக் கூடாது?' என அறிவுறித்தியுள்ளார் லில்லீ. என்ன தீர்க்கதரிசனம். லில்லீயின் வாக்கு பலித்தது. அந்த நாள் ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.
1988-ம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி, 15 வயதே ஆன நிலையில் சச்சின், மும்பைக்கும், குஜராத்துக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். தொடர்ந்து திலீப் கோப்பை, தியோடர் கோப்பை என தொடர்ந்து ஜமாய்த்தார் சச்சின். திலீப் வெங்சர்கார் பரிந்துரையின் பேரில் பாக்கிஸ்தானுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் சச்சின். மராத்தியர் என்பதால்தான் அவரை அணியில் சேர்க்க வெங்சர்கார் பாடுபட்டார் என்று விமர்சனங்கள் உண்டு. இருக்கலாம்! ஆனால், 20 ஆண்டு தொடர் வெற்றிக்கு மராத்தியர் என்ற தகுதி மட்டும் போதாது!
1989. நவம்பர் 15. பாக்கிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. சச்சினை அனைவரும் ஏளனமாக பார்த்தனர். 'இந்தப் பொடியனா ஆடப் போறான்?' என்று இந்திய ரசிகர்களுக்கே வியப்பு. 'பாக்கிஸ்தான் ஆட்டக் காரர்கள், முழு மாடை அப்படியே தின்பார்களே? இந்த சிறுவனால் சமாளிக்க முடியுமா?' என்று குழப்பம். பாக்கிஸ்தானியர்கள் வீசிய ஒவ்வொரு பந்தும் தீயை கக்கியது. மூஞ்சி பெயர்ந்தால் கூட பரவாயில்லை. பவுண்சரை போட்டு வெளியே அனுப்புங்கள் என்று பாக்கிஸ்தானிய பந்து வீச்சாளர்களுக்கு ரகசிய உத்தரவை பிறப்பித்தார் கேப்டன் வாசிம் அக்ராம். முதல் டெஸ்ட், முதல் இன்னிங்சில், வக்வார் யூனிஸின் பந்து வீச்சுக்கு, 15 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டார் சச்சின். இது சச்சினை சற்று சோர்வடைய செய்யவே, 'நீ டக் அவுட் ஆகி pavillion-க்கு திரும்பினால் கூட பரவாயில்லை. பயப் படாம ஆடு.' என குளுக்கோஸ் வார்த்தைகளை சொல்லி சச்சினை தேற்றியவர், அப்பொழுது இந்திய அணி கேப்டனாக இருந்த, நம்மூர் ஸ்ரீகாந்த். இந்த உற்சாகமான வார்த்தைகளை தொடர்ந்து டென்ஷனை துறந்து கோதாவில் இறங்கிய சச்சினுக்கு ஏறுமுகம்தான்!
1990ல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 119 ரன்களை குவித்து, இங்கிலாந்து பத்திரிகைகளின் பாராட்டு மழையில் நனைந்தார் சச்சின் தெண்டுல்கர்.
1996. இலங்கைக்கு எதிரான உலக கோப்பை அரை இறுதி போட்டி. இலங்கை வீரர்கள், அதிலும் குறிப்பாக, ஜெயசூர்யா, பயங்கர ஃபார்மில் இருந்த நேரம். சச்சின் தெண்டுல்கர் மட்டுமே சற்று நிதானமாக ஆடினார். அவர் அவுட் ஆனவுடன், நம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. சச்சின் அவுட் ஆகும் போது யாராவது பாத்ரூம் சென்றிருந்தால், அவர் திரும்பி வரும் போது, 'அதுக்குள்ள எல்லாரும் அவுட் ஆயிட்டாங்களா?' என துணுக்குற வைத்திருக்கும்! அவ்வளவு மோசமான ஆட்டம். சச்சின், இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த எவ்வளவு பெரிய பொக்கிஷம் என ரசிகர்கள் உணர ஆரம்பித்ததும் அப்பொழுதே!
1999ல் பாக்கிஸ்தானுக்கு இடையேயான, சென்னையில் நடந்த ஆட்டத்தின் போது சச்சின் தெண்டுல்கருக்கு மோசமான முதுகு வலி ஏற்பட்டது. சச்சின் இனி அவ்வளவுதான் என சிலர் ஆனந்தக் கூத்தாடினர். ஃபீனிக்ஸ் போல மீண்டு(ம்) வந்தார் சச்சின். 1999 உலகக் கோப்பை ஆட்டங்களின் போது, சச்சின் தெண்டுல்கரின் தந்தை மறைந்தார். ஆனால், ஆட்டத்தில் கவனம் சிதறாமல் ஆடி, இந்தியாவுக்கு ரன்களை குவித்தார் சச்சின் தெண்டுல்கர். நிச்சயமாக ரமேஷ் தெண்டுல்கரின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.
2003-ல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. பாக்கிஸ்தானுக்கு இடையேயான ஆட்டத்தில் 194 நாட் அவுட் என்ற நிலையில் சச்சின் தெண்டுல்கர் இருந்த போது, ஆட்டத்தை declare செய்தார் கேப்டன் டிராவிட். இது சச்சினை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது பற்றி சச்சினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, சச்சின் அவசரப் பட்டு வார்த்தை எதையும் விடவில்லை. இந்த விவேகம்தான் சச்சினை புகழின் உச்சியில் இன்னும் வைத்துள்ளது.
20 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக திகழும் சச்சின் தெண்டுல்கரை பாராட்டி மகிழ்வதில் மணியோசை.காம் பெருமை அடைகிறது!
ன்றைக்குப் பலரின் இதயம் நொறுங்கி இருக்கும் சச்சின் ஆறு ஓட்டம் இருக்கும் போது ஆட்டமிழந்தது. எனக்கு மனசே கேட்கலைங்க! அவரும் பாவம் எவ்வளவு மன அழுத்தம் தான் தாங்குவாரு. ஒருத்தரா இரண்டு பேரா! உலகம் முழுவதும் அவருக்கு எத்தனை கோடி ரசிகர்கள் அத்தனை பேரும் போதாது என்று ஊடகங்கள் வேறு இன்றைக்காவது 100 போடுவாரா! என்று வெறுப்பேத்திக்கொண்டு இருக்கின்றன.
என்னதான் சச்சின் அதிக அனுபவம் பெற்றவராக இருந்தாலும் அவரும் மனுஷன் தானே! சும்மா இல்லாம சச்சின் 100 அடித்தால் 100 தங்க காசு என்று மேலும் பெரிதாக்கி விட்டார்கள். தற்போதைக்கு அவருக்கு 1000 தங்க காசு கொடுத்தால் கூட வேண்டாம் இந்த நூறைப் போட்டால் போதும் ஆளை விடுங்கப்பா என்று தான் இருப்பார்.
இது எல்லாம் என்ன பெரிய விசயமா என்று கேட்பவர்களுக்கு என்னோட ஒரு குட்டி அனுபவத்தைச் சொல்றேன். நான் முன்பு பணியில் இருந்த ஒரு நிறுவனத்தில் சில நேரம் மீட்டிங் நடக்கும் போது பிரசன்ட்டேசன் செய்ய ப்ரொஜெக்டர் அமைக்க வேண்டியதிருக்கும் வருபவர்கள் கொண்டு வரும் லேப்டாப் ஒவ்வொரு மாடல் என்பதால் (தற்போது இந்தப் பிரச்சனை இல்லை) அப்போது அந்த ப்ரொஜெக்டர் சில நேரங்களில் வேலை செய்யாது அப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் நமக்காக காத்து இருப்பார்கள் அப்போது ஏற்படும் டென்ஷன் இருக்கே அதெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும். எல்லோரும் நம்மையே பார்க்கும் போது நம்மால் இயல்பாகவே வேலையைச் செய்ய முடியாது. எப்படியோ விரைவில் சரி செய்து விடுவேன் என்று வைங்க! ஆனால் அந்த கொஞ்ச நேரம் உண்மையாகவே நரகம் போல இருக்கும்.
இது சும்மா ஐநூறு பேர் தான் பல கோடிப் பேர் முன்னாடி ஒவ்வொன்றாக 100 வரை கொண்டு செல்வது எவ்வளவு கொடுமையான ஒன்று என்று சச்சினைத் தவிர வேற யாருக்கும் சொன்னாலும் புரியாது. பேசுகிறவர்கள் ஆயிரம் சொல்லலாம் அனுபவிக்கிறவங்களுக்குத் தான் அது எவ்வளவு ஒரு கொடுமையான ஒன்று என்று புரியும்.
தனி ஒருவரின் ஆட்டத்தைப் பார்க்காதீங்க என்று கூறுகிறார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்! ஆனால் என்ன பண்ணுறது சச்சின் பிடிக்குதோ பிடிக்கலையோ நம்ம குடும்பத்துல ஒருத்தர் மாதிரி ஆகிட்டாரு. என்னதான் திட்டினாலும் கோபப்பட்டாலும் பாசம் இல்லாமலா போய் விடும். எனக்கும் தான் சில நேரங்களில் சச்சின் விளையாட்டுப் பிடிக்காது.. ஆனால் சச்சினே பிடிக்கலைன்னு என்னால சொல்ல முடியலையே!
நேற்று சச்சின் மொக்கை போட்டதைப் பார்த்து சரி எப்படியும் விரைவில் ஆட்டமிழந்து விடுவார் என்றே நினைத்தேன்… ஆனால் இன்று காலையில் அதிரடியாக ஆடுவதைப் பார்த்ததும் சரி! ஒரு முடிவோட தான் இருக்காரு போல இன்றைக்கு 100 போட்டுடுவாரு என்று நம்பிக்கையாக இருந்தேன் ஆனால் Rampal மற்றும் Sammy அனைவரின் இதயத்தையும் நொறுக்கி விட்டார்கள் சொன்னது போலவே. ஐம்பது ஓட்டம் இருக்கும் போது ஆட்டமிழந்து இருந்தால் கூட வருத்தம் இருந்து இருக்காது இது உண்மையாகவே ரொம்பக் கஷ்டமா போச்சு.
சச்சின் 100 போடட்டும் அப்புறம் கச்சேரிய வச்சுக்கலாம் என்று இருந்தால் சொன்னது போலவே காலி செய்து விட்டார்கள். என்னமோ போங்க! கடுப்பா இருக்கு.

Sachin Tendulkar

லண்டன்: 2010ம் ஆண்டின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டி பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் அரங்கின் அசைக்க முடியாத நாயகனாகவும் மிளிர்ந்து கொண்டிருப்பவர் சச்சின். இவர் படைக்காத சாதனை இல்லை. அந்த சாதனைகளை முறியடிக்க பல வருடங்களாகும் நிலை வேறு.

இப்படி அடுக்கடுக்காய் சாதனைகளை சுமந்து நிற்கும் சச்சின் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மிகப் பெரிய சாதனை ஒன்றைப் படைத்தார். அப்போட்டியில் அபாரமாக ஆடிய சச்சின் 200 ரன்களைத் தொட்டு புதிய வரலாறு படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் போடப்பட்ட முதல் இரட்டை சதம் இதுதான்.

இந்த சாதனைப் போட்டி தற்போது டைம் இதழின் டாப் 10 சிறந்த ஆட்டப் பட்டியலில்இடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து டைம் இதழ் கூறுகையில், இப்படிப்பட்ட சிறப்பான சாதனைகள் அவ்வளவு சாதாரணமாக நடந்து விட முடியாதது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை, ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை எடுத்தது மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை யாரும் அந்த சாதனையைப் படைக்கவில்லை.

இப்போட்டியில், சச்சின் 3 சிக்சர்களை விளாசினார். அவர் எடுத்த 200 ரன்கள் மிகப் பெரிய சாதனையாகும்.

அவர் 199 ரன்களை எட்டியபோது போட்டி நடந்த குவாலியரில், இந்திய ரசிகர்கள் மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டனர். வரலாறு படைக்கப் போவது அவர்கள் கண் முன்பு தெரிந்த சந்தோஷத்தில் சச்சினை வாழ்த்தி குரல் எழுப்பினர். இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த பந்தில் சச்சின் எடுத்த 200வது ரன் மிகப் பெரியாக விருந்தாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை என்று டைம் இதழ் புகழாரம் சூடியுள்ளது.
God of Cricket - சச்சின் டெண்டுல்கரின் - தலை சிறந்த 5 டெஸ்ட் சதங்கள்

சச்சின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். விரைவில் அவருக்கு பாரத ரத்னா கிடைக்க வாழ்த்துவோம். தனது 20 வருட கிரிக்கெட் வரலாற்றில் , கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்தவர். இவரது விக்கெட்டை வீழ்த்துவது எதிர் அணியினருக்கு ஒரு கனவு. அவரது தலை சிறந்த 5 சதங்களை , ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாத மிகச் சிறந்த சதங்களை  இங்கே  பதிவு செய்வதில் எமது இணைய தளம் பெருமை கொள்கிறது.

 King Of Cricket Sachin Tendulkar


1. 114 Runs ,  at Perth, 1992;  - சச்சினின் மூன்றாவது சதம் . என்னுடைய மிகச் சிறந்த சதம் என்று சச்சினே குறிப்பிட்டது. மேக் டேர்மாட் , விட்னி, மெர்வ் ஹியுஸ், என்று அந்தக் காலத்தின் தலை சிறந்த ஆஸ்திரேலியா பவுலர்கள், பறந்து , பறந்து பந்தை வீச இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சச்சின் இறங்கிய பிறகும் பந்து  பறந்தது, ஆனால் பேட்டில் பட்டு.  சச்சின் வரும்போது ஸ்கோர் : 69 /2  . ஆனால் அடுத்த 90 ரன்களுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் காலி. அதன் பிறகு நடந்தது - சரித்திரம். கிரண் மோர் , சச்சின் இணை இந்த இன்னிங்ஸில் கலக்கியது. ஆனால் இந்தியா அந்த மாட்சை பரிதாபமாக தோற்றது.

 To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்

Sachin Tendulkar overcomes the challenges of a fast WACA pitch
2. 111 Runs at Johannesburg, 1992; - நான்காவது சதம். : இந்திய அணியின் முதல் தென் ஆப்ரிக்கா டூர் - டொனல்ட், மேத்யூஸ், மேக் மிலன், ஹன்சி குரோனே என்று மிகச் சிறந்த பவுலிங் அட்டாக். சச்சினை சாதாரண வீரர்களில் இருந்து , தனியே அடையாளம் காண வைத்த மேட்ச். ஆலன் டொனால்டின் அற்புதமான பந்து வீச்சு , சச்சின் என்னும் மா மேதையின் பேட்டிங் நுணுக்கங்களை உலகறிய வைத்த இன்னிங்ஸ்.     அடுத்த பெரிய ஸ்கோர் கபிலின் 25 ரன்கள்தான். இந்த மேட்ச் டிரா ஆனது.

To view complete score card :

இங்கே கிளிக் பண்ணவும்

3. 122 runs at Birmingham, 1996; ஒன்பதாவது சதம். இங்கிலாந்து அணியிடம் இந்தியா செம அடி வாங்கிய மேட்ச். ஆனால் ஒட்டு மொத்த உலக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சச்சினின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ். கிரிஸ் லூயிஸ், டொமினிக் கார்க், ஆலன் முல்லாலி என்று ஒரு டீமே இந்திய அணியை பந்தாடிய மேட்ச். ஆனால் அதனை பேரின் பந்து வீச்சும் த்வம்சம் செய்யப்பட்டது சச்சினால்.  இந்த இன்னிங்க்ஸில் சச்சின் தவிர அடுத்த பெஸ்ட் ஸ்கோர் தெரியுமா..? வெறும் 18 .(மஞ்ச்ரேகர்).அப்படினா அந்த பிட்ச் எப்படி இருந்தது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

To view complete score card :

இங்கே கிளிக் பண்ணவும்

4. 155 runs -  not out at Chennai, 1998; பதினைந்தாவது சதம் . வார்னே - சச்சினின் யுத்தத்தை உலகமே ஆவலுடன் எதிர் நோக்கிய மேட்ச். அசார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பந்தாடிய மேட்ச். முதல் இன்னிங்ஸில் சச்சின் விக்கெட்டை வார்னே கைப்பற்ற , இரண்டாவது இன்னிங்ஸ் இல் வார்னேயை முழி பிதுங்க வைத்தார். அந்த மேட்ச்க்குப் பிறகு வார்னே - பழைய வார்னே யாக இல்லை என்பது மட்டும் உண்மை.மரண அடி. 

To view complete score card :

இங்கே கிளிக் பண்ணவும் 


Sachin Tendulkar is delighted after scoring his century
5. 103 runs not out at Chennai, 2008; நாற்பத்தியோரவது சதம். இங்கிலாந்து அணிக்கு எதிராக காப்டன் டோனி தலைமையில்  இந்தியா ஒரு இமாலய ஸ்கோரை ( 387 ரன்கள் ) சேஸ் செய்த மேட்ச் .டெண்டுல்கர் இந்த சதத்தை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தார்.   ஹார்மிசன், ஆண்டெர்சன், பிளின்டாப், பனேசர் என்று நான்கு சிறந்த பவுலர்கள் கொண்ட அணியை  , சச்சினின் பேட் வெளுத்து வாங்கியது.சேவாக் நல்லதொரு அடித்தளத்தை அமைத்தாலும்,   VVS லக்ஷ்மன் அவுட் ஆனபோது இன்னும் 163 ரன்கள் தேவைப்பட்டது.  சச்சின் நிலைத்து நிற்பதுடன் வெற்றிக்கும் அழைத்து செல்லவேண்டிய கட்டாயம்.யுவராஜ் ஒரு முனையில் கை கொடுக்க இந்தியா அனாயசமாக வெற்றி கொண்டது. இந்த மாட்ச்சில் இருந்து இந்திய அணியின் பீடு நடை உலகின் தலை சிறந்த அணியாக  இந்தியாவை மாற்றத் தொடங்கியது.


சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இன்று இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் புதியதொரு சாதனையைப் படைத்தார். டெஸ்ட், ஒருதின மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டி என மூன்று போட்டிகளிலும்  சேர்த்து 30,000 ரன்களைக் கடந்தார்.

அஹமதாபாத்தில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி, இன்று டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுடன் ஏமாற்றிய சச்சின், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியையும் தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்வதற்கு துணை புரிந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களைத் தொட்ட போது சர்வதேச அரங்கில் 30,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மேலும் அவரைப்பற்றி…

தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், (24 ஏப்ரல் 1973 அன்று) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.

பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.

1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் பல்வேறு சாதனைக்ளைப் படைத்துள்ளார்…

சச்சினின் சாதனைகள்

சர்வதேச அளவில்…

கடந்த 1989-ம் வருடம் நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தவர்.. இன்று வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் (டெஸ்ட் போட்டிகளில் 12,877 + ஒருதினப்போட்டிகளில் 17178 + 20 ஓவர் போட்டியில் 10 = 30,065 ரன்கள்). இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (24,057 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (22,358 ரன்கள்) உள்ளனர்.

டெஸ்ட் போட்டி சாதனைகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ரன் குவித்துள்ள முதல் வீரர்: 12,877 (இன்னும் 133 ரன்கள் எடுத்தால் 18,000 ரன்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 38 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஒருதினப் போட்டி  சாதனைகள்

அதிக அளவு (436) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (17,178) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (45) சதங்களைக் கடந்தவர். (இதில் இவர் அடித்த 32 சதங்கள் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருக்கின்றன), ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (91) அரை சதங்களைக் கடந்தவர், 436 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (61 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.  இந்தியா ஆடிய  இறுதி ஒரு தினப் போட்டிகளில் அதிக (6) சதம் அடித்த வீரர், இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி…

ஒரு தினப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர்  (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் உள்பட 3005 ரன்கள்), மேலும் 3 அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை முறையே: 3005, 2749, 2389 ரன்கள்) எதிராக 2000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசம்தான்.

1998-ன் காலண்டர் ஆண்டில் (9 சதம்) அதிக சதம் அடித்த  முதல் வீரர். ஒரு காலாண்டர் ஆண்டில் (1998) அதிக அளவு ரன் குவித்த முதல் வீரர் (34 போட்டிகளில் 1894 ரன்கள், சராசரி 65.31). தொடர்ச்சியாக 7 காலாண்டர் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.

1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார். இந்த பாராட்டினை சச்சின் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.

இந்திய அணிக்காக விளையாடி வருவது குறித்து, அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சச்சின்  தெரிவித்ததாவது: ‘இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.’ என்றார்.

இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.

இப்படி... இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்…  இந்திய அணிக்கு  திராவிட் எப்படி அணியின் சுவர் என வர்ணிக்கப் படுகிறாரோ… அது போல் கிரிக்கெட்டின் சுவர் என சச்சினை அழைத்தால் அது மிகையில்லை