தோன்றுபவரெல்லாம் புகழோடு தோன்றுவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்குதான் புகழும் பணமும் வந்து சேரும். அவ்வாறு ஆயிரத்தில் ஒருவர்தான் சச்சின் தெண்டுல்கர். 1989ம் ஆண்டு தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி, 20 ஆண்டுகள் ஆகியும் ஆட்டம் காணாமல் ஸ்டெடியாக ஆடி வருகிறார் இந்த கிரிக்கெட் சூறாவளி!
1973ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சச்சின் தெண்டுல்கர். அவரது தந்தை ரமேஷ் தெண்டுல்கர் ஒரு மராத்தி நாவலாசிரியர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சச்சினுக்கு கிரிக்கெட்டில் அலாதி பிரியம். தாம்தூம் என ஆடி அடிக்கடி அக்கம்பக்கத்து கண்ணாடி ஜன்னல்களை பதம் பார்த்து விடுவாராம் சச்சின். சச்சின் தெண்டுல்கர், ஆரம்பக் காலத்தில், வேகப் பந்து வீச்சாளர் ஆக ஆசைப் பட்டாராம். இதற்காக சென்னை எம்.ஆர்.எஃப் ஃபவுண்டேஷனில் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது, அவரது பயிற்சியாளர் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லீ (Dennis lilee). சச்சின் தெண்டுல்கரின் பந்து வீச்சு, லில்லீயைக் கவரவில்லை. 'நீ ஏன் பேட்டிங்ல கவனம் செலுத்தக் கூடாது?' என அறிவுறித்தியுள்ளார் லில்லீ. என்ன தீர்க்கதரிசனம். லில்லீயின் வாக்கு பலித்தது. அந்த நாள் ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.
1988-ம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி, 15 வயதே ஆன நிலையில் சச்சின், மும்பைக்கும், குஜராத்துக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். தொடர்ந்து திலீப் கோப்பை, தியோடர் கோப்பை என தொடர்ந்து ஜமாய்த்தார் சச்சின். திலீப் வெங்சர்கார் பரிந்துரையின் பேரில் பாக்கிஸ்தானுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் சச்சின். மராத்தியர் என்பதால்தான் அவரை அணியில் சேர்க்க வெங்சர்கார் பாடுபட்டார் என்று விமர்சனங்கள் உண்டு. இருக்கலாம்! ஆனால், 20 ஆண்டு தொடர் வெற்றிக்கு மராத்தியர் என்ற தகுதி மட்டும் போதாது!
1989. நவம்பர் 15. பாக்கிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. சச்சினை அனைவரும் ஏளனமாக பார்த்தனர். 'இந்தப் பொடியனா ஆடப் போறான்?' என்று இந்திய ரசிகர்களுக்கே வியப்பு. 'பாக்கிஸ்தான் ஆட்டக் காரர்கள், முழு மாடை அப்படியே தின்பார்களே? இந்த சிறுவனால் சமாளிக்க முடியுமா?' என்று குழப்பம். பாக்கிஸ்தானியர்கள் வீசிய ஒவ்வொரு பந்தும் தீயை கக்கியது. மூஞ்சி பெயர்ந்தால் கூட பரவாயில்லை. பவுண்சரை போட்டு வெளியே அனுப்புங்கள் என்று பாக்கிஸ்தானிய பந்து வீச்சாளர்களுக்கு ரகசிய உத்தரவை பிறப்பித்தார் கேப்டன் வாசிம் அக்ராம். முதல் டெஸ்ட், முதல் இன்னிங்சில், வக்வார் யூனிஸின் பந்து வீச்சுக்கு, 15 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டார் சச்சின். இது சச்சினை சற்று சோர்வடைய செய்யவே, 'நீ டக் அவுட் ஆகி pavillion-க்கு திரும்பினால் கூட பரவாயில்லை. பயப் படாம ஆடு.' என குளுக்கோஸ் வார்த்தைகளை சொல்லி சச்சினை தேற்றியவர், அப்பொழுது இந்திய அணி கேப்டனாக இருந்த, நம்மூர் ஸ்ரீகாந்த். இந்த உற்சாகமான வார்த்தைகளை தொடர்ந்து டென்ஷனை துறந்து கோதாவில் இறங்கிய சச்சினுக்கு ஏறுமுகம்தான்!
1990ல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 119 ரன்களை குவித்து, இங்கிலாந்து பத்திரிகைகளின் பாராட்டு மழையில் நனைந்தார் சச்சின் தெண்டுல்கர்.
1996. இலங்கைக்கு எதிரான உலக கோப்பை அரை இறுதி போட்டி. இலங்கை வீரர்கள், அதிலும் குறிப்பாக, ஜெயசூர்யா, பயங்கர ஃபார்மில் இருந்த நேரம். சச்சின் தெண்டுல்கர் மட்டுமே சற்று நிதானமாக ஆடினார். அவர் அவுட் ஆனவுடன், நம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. சச்சின் அவுட் ஆகும் போது யாராவது பாத்ரூம் சென்றிருந்தால், அவர் திரும்பி வரும் போது, 'அதுக்குள்ள எல்லாரும் அவுட் ஆயிட்டாங்களா?' என துணுக்குற வைத்திருக்கும்! அவ்வளவு மோசமான ஆட்டம். சச்சின், இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த எவ்வளவு பெரிய பொக்கிஷம் என ரசிகர்கள் உணர ஆரம்பித்ததும் அப்பொழுதே!
1999ல் பாக்கிஸ்தானுக்கு இடையேயான, சென்னையில் நடந்த ஆட்டத்தின் போது சச்சின் தெண்டுல்கருக்கு மோசமான முதுகு வலி ஏற்பட்டது. சச்சின் இனி அவ்வளவுதான் என சிலர் ஆனந்தக் கூத்தாடினர். ஃபீனிக்ஸ் போல மீண்டு(ம்) வந்தார் சச்சின். 1999 உலகக் கோப்பை ஆட்டங்களின் போது, சச்சின் தெண்டுல்கரின் தந்தை மறைந்தார். ஆனால், ஆட்டத்தில் கவனம் சிதறாமல் ஆடி, இந்தியாவுக்கு ரன்களை குவித்தார் சச்சின் தெண்டுல்கர். நிச்சயமாக ரமேஷ் தெண்டுல்கரின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.
2003-ல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. பாக்கிஸ்தானுக்கு இடையேயான ஆட்டத்தில் 194 நாட் அவுட் என்ற நிலையில் சச்சின் தெண்டுல்கர் இருந்த போது, ஆட்டத்தை declare செய்தார் கேப்டன் டிராவிட். இது சச்சினை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது பற்றி சச்சினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, சச்சின் அவசரப் பட்டு வார்த்தை எதையும் விடவில்லை. இந்த விவேகம்தான் சச்சினை புகழின் உச்சியில் இன்னும் வைத்துள்ளது.
20 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக திகழும் சச்சின் தெண்டுல்கரை பாராட்டி மகிழ்வதில் மணியோசை.காம் பெருமை அடைகிறது!
ன்றைக்குப் பலரின் இதயம் நொறுங்கி இருக்கும் சச்சின் ஆறு ஓட்டம் இருக்கும் போது ஆட்டமிழந்தது. எனக்கு மனசே கேட்கலைங்க! அவரும் பாவம் எவ்வளவு மன அழுத்தம் தான் தாங்குவாரு. ஒருத்தரா இரண்டு பேரா! உலகம் முழுவதும் அவருக்கு எத்தனை கோடி ரசிகர்கள் அத்தனை பேரும் போதாது என்று ஊடகங்கள் வேறு இன்றைக்காவது 100 போடுவாரா! என்று வெறுப்பேத்திக்கொண்டு இருக்கின்றன.
என்னதான் சச்சின் அதிக அனுபவம் பெற்றவராக இருந்தாலும் அவரும் மனுஷன் தானே! சும்மா இல்லாம சச்சின் 100 அடித்தால் 100 தங்க காசு என்று மேலும் பெரிதாக்கி விட்டார்கள். தற்போதைக்கு அவருக்கு 1000 தங்க காசு கொடுத்தால் கூட வேண்டாம் இந்த நூறைப் போட்டால் போதும் ஆளை விடுங்கப்பா என்று தான் இருப்பார்.
இது எல்லாம் என்ன பெரிய விசயமா என்று கேட்பவர்களுக்கு என்னோட ஒரு குட்டி அனுபவத்தைச் சொல்றேன். நான் முன்பு பணியில் இருந்த ஒரு நிறுவனத்தில் சில நேரம் மீட்டிங் நடக்கும் போது பிரசன்ட்டேசன் செய்ய ப்ரொஜெக்டர் அமைக்க வேண்டியதிருக்கும் வருபவர்கள் கொண்டு வரும் லேப்டாப் ஒவ்வொரு மாடல் என்பதால் (தற்போது இந்தப் பிரச்சனை இல்லை) அப்போது அந்த ப்ரொஜெக்டர் சில நேரங்களில் வேலை செய்யாது அப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் நமக்காக காத்து இருப்பார்கள் அப்போது ஏற்படும் டென்ஷன் இருக்கே அதெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும். எல்லோரும் நம்மையே பார்க்கும் போது நம்மால் இயல்பாகவே வேலையைச் செய்ய முடியாது. எப்படியோ விரைவில் சரி செய்து விடுவேன் என்று வைங்க! ஆனால் அந்த கொஞ்ச நேரம் உண்மையாகவே நரகம் போல இருக்கும்.
இது சும்மா ஐநூறு பேர் தான் பல கோடிப் பேர் முன்னாடி ஒவ்வொன்றாக 100 வரை கொண்டு செல்வது எவ்வளவு கொடுமையான ஒன்று என்று சச்சினைத் தவிர வேற யாருக்கும் சொன்னாலும் புரியாது. பேசுகிறவர்கள் ஆயிரம் சொல்லலாம் அனுபவிக்கிறவங்களுக்குத் தான் அது எவ்வளவு ஒரு கொடுமையான ஒன்று என்று புரியும்.
தனி ஒருவரின் ஆட்டத்தைப் பார்க்காதீங்க என்று கூறுகிறார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்! ஆனால் என்ன பண்ணுறது சச்சின் பிடிக்குதோ பிடிக்கலையோ நம்ம குடும்பத்துல ஒருத்தர் மாதிரி ஆகிட்டாரு. என்னதான் திட்டினாலும் கோபப்பட்டாலும் பாசம் இல்லாமலா போய் விடும். எனக்கும் தான் சில நேரங்களில் சச்சின் விளையாட்டுப் பிடிக்காது.. ஆனால் சச்சினே பிடிக்கலைன்னு என்னால சொல்ல முடியலையே!
நேற்று சச்சின் மொக்கை போட்டதைப் பார்த்து சரி எப்படியும் விரைவில் ஆட்டமிழந்து விடுவார் என்றே நினைத்தேன்… ஆனால் இன்று காலையில் அதிரடியாக ஆடுவதைப் பார்த்ததும் சரி! ஒரு முடிவோட தான் இருக்காரு போல இன்றைக்கு 100 போட்டுடுவாரு என்று நம்பிக்கையாக இருந்தேன் ஆனால் Rampal மற்றும் Sammy அனைவரின் இதயத்தையும் நொறுக்கி விட்டார்கள் சொன்னது போலவே. ஐம்பது ஓட்டம் இருக்கும் போது ஆட்டமிழந்து இருந்தால் கூட வருத்தம் இருந்து இருக்காது இது உண்மையாகவே ரொம்பக் கஷ்டமா போச்சு.
சச்சின் 100 போடட்டும் அப்புறம் கச்சேரிய வச்சுக்கலாம் என்று இருந்தால் சொன்னது போலவே காலி செய்து விட்டார்கள். என்னமோ போங்க! கடுப்பா இருக்கு.

Sachin Tendulkar

லண்டன்: 2010ம் ஆண்டின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டி பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் அரங்கின் அசைக்க முடியாத நாயகனாகவும் மிளிர்ந்து கொண்டிருப்பவர் சச்சின். இவர் படைக்காத சாதனை இல்லை. அந்த சாதனைகளை முறியடிக்க பல வருடங்களாகும் நிலை வேறு.

இப்படி அடுக்கடுக்காய் சாதனைகளை சுமந்து நிற்கும் சச்சின் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மிகப் பெரிய சாதனை ஒன்றைப் படைத்தார். அப்போட்டியில் அபாரமாக ஆடிய சச்சின் 200 ரன்களைத் தொட்டு புதிய வரலாறு படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் போடப்பட்ட முதல் இரட்டை சதம் இதுதான்.

இந்த சாதனைப் போட்டி தற்போது டைம் இதழின் டாப் 10 சிறந்த ஆட்டப் பட்டியலில்இடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து டைம் இதழ் கூறுகையில், இப்படிப்பட்ட சிறப்பான சாதனைகள் அவ்வளவு சாதாரணமாக நடந்து விட முடியாதது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை, ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை எடுத்தது மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை யாரும் அந்த சாதனையைப் படைக்கவில்லை.

இப்போட்டியில், சச்சின் 3 சிக்சர்களை விளாசினார். அவர் எடுத்த 200 ரன்கள் மிகப் பெரிய சாதனையாகும்.

அவர் 199 ரன்களை எட்டியபோது போட்டி நடந்த குவாலியரில், இந்திய ரசிகர்கள் மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டனர். வரலாறு படைக்கப் போவது அவர்கள் கண் முன்பு தெரிந்த சந்தோஷத்தில் சச்சினை வாழ்த்தி குரல் எழுப்பினர். இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த பந்தில் சச்சின் எடுத்த 200வது ரன் மிகப் பெரியாக விருந்தாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை என்று டைம் இதழ் புகழாரம் சூடியுள்ளது.
God of Cricket - சச்சின் டெண்டுல்கரின் - தலை சிறந்த 5 டெஸ்ட் சதங்கள்

சச்சின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். விரைவில் அவருக்கு பாரத ரத்னா கிடைக்க வாழ்த்துவோம். தனது 20 வருட கிரிக்கெட் வரலாற்றில் , கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்தவர். இவரது விக்கெட்டை வீழ்த்துவது எதிர் அணியினருக்கு ஒரு கனவு. அவரது தலை சிறந்த 5 சதங்களை , ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாத மிகச் சிறந்த சதங்களை  இங்கே  பதிவு செய்வதில் எமது இணைய தளம் பெருமை கொள்கிறது.

 King Of Cricket Sachin Tendulkar


1. 114 Runs ,  at Perth, 1992;  - சச்சினின் மூன்றாவது சதம் . என்னுடைய மிகச் சிறந்த சதம் என்று சச்சினே குறிப்பிட்டது. மேக் டேர்மாட் , விட்னி, மெர்வ் ஹியுஸ், என்று அந்தக் காலத்தின் தலை சிறந்த ஆஸ்திரேலியா பவுலர்கள், பறந்து , பறந்து பந்தை வீச இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சச்சின் இறங்கிய பிறகும் பந்து  பறந்தது, ஆனால் பேட்டில் பட்டு.  சச்சின் வரும்போது ஸ்கோர் : 69 /2  . ஆனால் அடுத்த 90 ரன்களுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் காலி. அதன் பிறகு நடந்தது - சரித்திரம். கிரண் மோர் , சச்சின் இணை இந்த இன்னிங்ஸில் கலக்கியது. ஆனால் இந்தியா அந்த மாட்சை பரிதாபமாக தோற்றது.

 To view complete score card :
இங்கே கிளிக் பண்ணவும்

Sachin Tendulkar overcomes the challenges of a fast WACA pitch
2. 111 Runs at Johannesburg, 1992; - நான்காவது சதம். : இந்திய அணியின் முதல் தென் ஆப்ரிக்கா டூர் - டொனல்ட், மேத்யூஸ், மேக் மிலன், ஹன்சி குரோனே என்று மிகச் சிறந்த பவுலிங் அட்டாக். சச்சினை சாதாரண வீரர்களில் இருந்து , தனியே அடையாளம் காண வைத்த மேட்ச். ஆலன் டொனால்டின் அற்புதமான பந்து வீச்சு , சச்சின் என்னும் மா மேதையின் பேட்டிங் நுணுக்கங்களை உலகறிய வைத்த இன்னிங்ஸ்.     அடுத்த பெரிய ஸ்கோர் கபிலின் 25 ரன்கள்தான். இந்த மேட்ச் டிரா ஆனது.

To view complete score card :

இங்கே கிளிக் பண்ணவும்

3. 122 runs at Birmingham, 1996; ஒன்பதாவது சதம். இங்கிலாந்து அணியிடம் இந்தியா செம அடி வாங்கிய மேட்ச். ஆனால் ஒட்டு மொத்த உலக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சச்சினின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ். கிரிஸ் லூயிஸ், டொமினிக் கார்க், ஆலன் முல்லாலி என்று ஒரு டீமே இந்திய அணியை பந்தாடிய மேட்ச். ஆனால் அதனை பேரின் பந்து வீச்சும் த்வம்சம் செய்யப்பட்டது சச்சினால்.  இந்த இன்னிங்க்ஸில் சச்சின் தவிர அடுத்த பெஸ்ட் ஸ்கோர் தெரியுமா..? வெறும் 18 .(மஞ்ச்ரேகர்).அப்படினா அந்த பிட்ச் எப்படி இருந்தது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

To view complete score card :

இங்கே கிளிக் பண்ணவும்

4. 155 runs -  not out at Chennai, 1998; பதினைந்தாவது சதம் . வார்னே - சச்சினின் யுத்தத்தை உலகமே ஆவலுடன் எதிர் நோக்கிய மேட்ச். அசார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பந்தாடிய மேட்ச். முதல் இன்னிங்ஸில் சச்சின் விக்கெட்டை வார்னே கைப்பற்ற , இரண்டாவது இன்னிங்ஸ் இல் வார்னேயை முழி பிதுங்க வைத்தார். அந்த மேட்ச்க்குப் பிறகு வார்னே - பழைய வார்னே யாக இல்லை என்பது மட்டும் உண்மை.மரண அடி. 

To view complete score card :

இங்கே கிளிக் பண்ணவும் 


Sachin Tendulkar is delighted after scoring his century
5. 103 runs not out at Chennai, 2008; நாற்பத்தியோரவது சதம். இங்கிலாந்து அணிக்கு எதிராக காப்டன் டோனி தலைமையில்  இந்தியா ஒரு இமாலய ஸ்கோரை ( 387 ரன்கள் ) சேஸ் செய்த மேட்ச் .டெண்டுல்கர் இந்த சதத்தை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தார்.   ஹார்மிசன், ஆண்டெர்சன், பிளின்டாப், பனேசர் என்று நான்கு சிறந்த பவுலர்கள் கொண்ட அணியை  , சச்சினின் பேட் வெளுத்து வாங்கியது.சேவாக் நல்லதொரு அடித்தளத்தை அமைத்தாலும்,   VVS லக்ஷ்மன் அவுட் ஆனபோது இன்னும் 163 ரன்கள் தேவைப்பட்டது.  சச்சின் நிலைத்து நிற்பதுடன் வெற்றிக்கும் அழைத்து செல்லவேண்டிய கட்டாயம்.யுவராஜ் ஒரு முனையில் கை கொடுக்க இந்தியா அனாயசமாக வெற்றி கொண்டது. இந்த மாட்ச்சில் இருந்து இந்திய அணியின் பீடு நடை உலகின் தலை சிறந்த அணியாக  இந்தியாவை மாற்றத் தொடங்கியது.


சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இன்று இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் புதியதொரு சாதனையைப் படைத்தார். டெஸ்ட், ஒருதின மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டி என மூன்று போட்டிகளிலும்  சேர்த்து 30,000 ரன்களைக் கடந்தார்.

அஹமதாபாத்தில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி, இன்று டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுடன் ஏமாற்றிய சச்சின், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியையும் தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்வதற்கு துணை புரிந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களைத் தொட்ட போது சர்வதேச அரங்கில் 30,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மேலும் அவரைப்பற்றி…

தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், (24 ஏப்ரல் 1973 அன்று) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.

பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.

1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் பல்வேறு சாதனைக்ளைப் படைத்துள்ளார்…

சச்சினின் சாதனைகள்

சர்வதேச அளவில்…

கடந்த 1989-ம் வருடம் நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தவர்.. இன்று வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் (டெஸ்ட் போட்டிகளில் 12,877 + ஒருதினப்போட்டிகளில் 17178 + 20 ஓவர் போட்டியில் 10 = 30,065 ரன்கள்). இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (24,057 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (22,358 ரன்கள்) உள்ளனர்.

டெஸ்ட் போட்டி சாதனைகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ரன் குவித்துள்ள முதல் வீரர்: 12,877 (இன்னும் 133 ரன்கள் எடுத்தால் 18,000 ரன்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 38 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஒருதினப் போட்டி  சாதனைகள்

அதிக அளவு (436) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (17,178) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (45) சதங்களைக் கடந்தவர். (இதில் இவர் அடித்த 32 சதங்கள் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருக்கின்றன), ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (91) அரை சதங்களைக் கடந்தவர், 436 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (61 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.  இந்தியா ஆடிய  இறுதி ஒரு தினப் போட்டிகளில் அதிக (6) சதம் அடித்த வீரர், இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி…

ஒரு தினப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர்  (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் உள்பட 3005 ரன்கள்), மேலும் 3 அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை முறையே: 3005, 2749, 2389 ரன்கள்) எதிராக 2000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசம்தான்.

1998-ன் காலண்டர் ஆண்டில் (9 சதம்) அதிக சதம் அடித்த  முதல் வீரர். ஒரு காலாண்டர் ஆண்டில் (1998) அதிக அளவு ரன் குவித்த முதல் வீரர் (34 போட்டிகளில் 1894 ரன்கள், சராசரி 65.31). தொடர்ச்சியாக 7 காலாண்டர் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.

1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார். இந்த பாராட்டினை சச்சின் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.

இந்திய அணிக்காக விளையாடி வருவது குறித்து, அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சச்சின்  தெரிவித்ததாவது: ‘இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.’ என்றார்.

இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.

இப்படி... இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்…  இந்திய அணிக்கு  திராவிட் எப்படி அணியின் சுவர் என வர்ணிக்கப் படுகிறாரோ… அது போல் கிரிக்கெட்டின் சுவர் என சச்சினை அழைத்தால் அது மிகையில்லை


மும்பை : 100 வது சதம் அடிக்க இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு அவரது மகன் அட்வைஸ் கூறியுள்ளார். சதமடிக்கும் போது ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க, 90 ரன்களை தாண்டிய உடன் அதிரடியாக சிக்ஸர் அடித்து விட வேண்டும் என்று சச்சினின் மகன் அர்ஜூன் அவரிடம் தெரிவித்துள்ளார். இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது சர்வதேச 100வது சதத்தை கடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதை எட்ட முடியாமல் சச்சின் தவித்து வரும் நிலையில் நாளை மும்பையில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியின் போதாவது சச்சின் 100வது சதத்தைப் போடுவாரா என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளனர்.


சச்சின் டெண்டுல்கர்
Sachin Tendulkar.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
பிறப்பு 24 ஏப்ரல் 1973 (அகவை 38)

மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உயரம் 5 ft 5 in (1.65 m)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை இடச்சுழல், வலக்கை வலச்சுழல், வலக்கை இடத்திருப்பு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 187) நவம்பர் 15 1989: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு சனவரி 2 2011: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 74) டிசம்பர் 18 1989: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 2 2011:  எ இலங்கை
சட்டை இல. 10
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1988–இன்று மும்பை துடுப்பாட்ட அணி
2008–இன்று மும்பை இண்டியன்ஸ்
1992 யோர்க்சயர் கவுண்டி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்

தேர்வு ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 177 453 280 536
ஓட்டங்கள் 14,692 18111 23,585 21,505
துடுப்பாட்ட சராசரி 56.95 45.16 59.86 45.95
100கள்/50கள் 51/59 48/93 77/105 59/111
அதிக ஓட்டங்கள் 248* 200* 248* 200*

பந்து வீச்சுகள் 4,096 8,020 7,461 10,196
இலக்குகள் 45 154 70 201
பந்துவீச்சு சராசரி 53.07 44.26 59.86 42.01
சுற்றில் 5 இலக்குகள் 0 2 0 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/10 5/32 3/10 5/32
பிடிகள்/ஸ்டம்புகள் 106/– 134/– 174/– 169/–
மார்ச் 13, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்(Marathi:सचिन रमेश तेंडुलकर, Sachin Ramesh Thendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973)

        இந்தியத் துடுப்பாட்ட வீரர். தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும்.
இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.[1] இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

டெண்டுல்கர் - களத்தில்

பொருளடக்கம்

 [மறை

 வாழ்க்கைக் குறிப்பு

சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது. டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

 கிரிக்கெட் வாழ்க்கை

  • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.
  • 1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
  • 1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார் சச்சின் அரையிறுதியில்.
  • 1998 ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார். அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.
  • 1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது.அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
  • 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியில் பங்கேற்காமல் இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141 குவித்தார். அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
  • 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணமானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
  • 2005, டிசம்பர் 10 அன்று கவாஸ்கரின் டெஸ்ட் சதங்கள் (34 ) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
  • 2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
  • 2008 அக்டோபர்17ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12273 (நவம்பர் 10, 2008 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 50 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார்.அதிக பட்ச ஓட்டம் 248*.
  • ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2010 -இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.
  • 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.
  • ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134, டெஸ்ட் போட்டிகளில் 106. மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.
  • 2011,நவம்பர் 8 அன்று டெஸ்ட் ஆட்டங்களில் 15000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.
  • இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
  • 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.(இந்தியப் பாராளுமன்றம் வரை இந்த சிக்கல் விவாதிக்கப்பட்டது).
  • 2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
  • 2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் ராகுல் டிராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டை சதம் சாத்தியமில்லாமல் போனது.
  •  சச்சினின் டெஸ்ட் சதங்கள்
  • இதுவரை சச்சின் எடுத்துள்ள 51 சதங்களில் 11 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது:
1990
1. இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை)
1992
2. முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை)
3. பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி)
4. நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை)
இதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான்.
1993
5. பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி)
6. ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி)
1994
7. ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி)
8. டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை)
1996
9. ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி)
10. ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை)
1997
11. ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி)
12. ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை)
13. ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை)
14. டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை)
1998
15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி)
16. மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி)
17. டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி)
1999
18. ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள் (தோல்வி)
முதுகுவலியுடன் சக்லைன் முஷ்டாக்கின் கடுமையான பந்துவீச்சினை சமாளித்து சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
19. பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை)
20. அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை)
21. அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்டங்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை)
22. டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி)
2000
23. நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி)
24. நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை)
2001
25. மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி)
26. நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி)
27. டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை)
2002
28. பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி)
29. ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது.
30. ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி)
31. நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை)
2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை
2004
32. ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை)
33. மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி)
34. டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி)
2005
35. டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு.
இடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார்
2006
2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான்.
2007
36. மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை)
37. மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி)
2008
38. ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம்
39. ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை)
40. நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி)
41. டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது.
இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்
2009
42. மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது
43. 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை)
2010
44. ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி)
45. ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி)
46. பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி)
47. பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின். (வெற்றி)
48. சூலை 28, 2010 - எசு.எசு.சி., கொழும்பு - இலங்கைக்கு எதிராக இரண்டாவது தேர்வுப் போட்டியில் 203 ஓட்டங்கள். (சமநிலை)
49. அக்டோபர் 12, 2010 - சின்னசாமி அரங்கம், பெங்களூரு - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது தேர்வுப் போட்டியில் 214 ஓட்டங்கள். (வெற்றி)
50. டிசம்பர் 19, 2010, செஞ்சூரியனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 111* ஓட்டங்கள் (தோல்வி)
2011
51. ஜனவரி 2, 2011, கேப்டவுனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் 146 ஓட்டங்கள்

[தொகு] விருதுகள்

1994 அர்ஜூனா விருது.
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.
1999-பத்மஷ்ரீ விருது.
2008-பத்மவிபூஷன் விருத.

[தொகு] புகழுரைகள்

  • உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
  • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.
  • ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.

 ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்

2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே!
" இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார். [2] [3]

மேற்கோள்கள்

http://images.askmen.com/men/celeb_profiles_sports/pictures/sachin_tendulkar/sachin_tendulkar.jpg


உலகத்தின் மிகச்சிறந்த  கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் . அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர் . அவருக்கு பிறந்த நாள் பரிசாக ஐ .பி .எல் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன .  இதில் சிறந்த துடுப்பாட்ட வீரர் , கேப்டன் விருதை மும்பை அணியின் சச்சின் தட்டிச் சென்றார். இவர் 14 லீக் போட்டியில், 5 அரைசதம் உட்பட 570 ஓட்டங்களை சேர்த்துள்ளார் . இவருக்கு பிறந்த நாள் பரிசாக இவ்விருதுகள் அமைந்தன .
http://img.timeinc.net/time/asia/2006/heroes/images/357_tendulkar.jpg
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1973 ம் ஆண்டு ஏப்., 24 ம் திகதி மும்பையில் பிறந்தார். 1989 ம் ஆண்டு அணியில் அறிமுகமான இவர், 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடுகிறார். 
http://www.24cricket.com/wp-content/uploads/2010/01/Sachin-Tendulkar-300x277.jpg
டெஸ்ட் (13447 ரன்) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598 ரன்) அதிக ஓட்டங்கள்  குவித்து சாதனை படைத்துள்ளார்.  அதிக சதம் (டெஸ்ட்-47, ஒரு நாள்-46) கடந்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் (குவாலியர்), இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இப்பெருமை எட்டும் முதல் வீரரானார்.
http://nimg.sulekha.com/sports/original700/sachin-tendulkar-2010-1-21-7-46-30.jpg
இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் தற்பெருமை இல்லாதவர் . தன்னடக்கம் ஆனவர் . இதனால் தான் இவர் புகழ் இன்னமும் அதிகரித்து கொண்டு செல்கிறது போலும். மற்றையவர்களை போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிப்பவர் .

சச்சினின் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவித்த வீரர்கள் :
சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன், அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து ஹர்பஜன் கூறியது: வயது என்பது சச்சினை பொறுத்த வரை, வெறும் எண்ணிக்கை தான். கடந்த 6 மாதங்களுக்கு சச்சினின் செயல்பாடு பிரம்மிக்கும் வகையில் உள்ளது. நாளுக்கு நாள் சற்றும் குறையாத அவரது ரன் தாகம், ஆச்சரியம் அளிக்கிறது. கிரிக்கெட் மீதுள்ள அவரது ஈடுபாடு, இளம் வீரர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. 17 வயது வீரரை போல தற்போதும் சச்சின் துடிப்புடன் விளையாடி வருகிறார் என்று கூறினார் .
சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைப்பதற்கு சச்சின் முக்கிய காரணம். அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும், எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தூண்டுகோலாக அமைந்தன. வயது பல சென்றாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் தொய்வு ஏற்பட வில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர் சச்சின். நகைச் சுவையாக கூறினால், ஒவ்வொரு ஆண்டும் அவரது வயது குறைந்து கொண்டே செல்கிறது. சச்சினுக்கு முன்பாக நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறினார் .


சச்சினுக்கு ஷேன் வார்ன்,  ரெய்னா, யுவராஜ்,  ஷாருக் கான் ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் எல்லோரும் சச்சினை எப்போதும் வாழ்த்தி கொண்டே இருப்பார்கள் . இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் . பல போட்டிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை இன்னும் உற்சாகப் படுத்த வேண்டும் . சச்சின் என்றும் நீடூழி வாழ்க வாழ்த்துகின்றோம் . 


நவீனத்துவத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்ற சச்சின் டெண்டுல்கரின் கருத்துக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.


ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாக நீடிக்க அதில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் பட்ஸ்மன் சச்சின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பி@ரரணை ஒன்றினை முன்வைத்தார். எனினும் இதற்கு ஐ.சி.சி. யினால் உடனடியாகவே மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பியன் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக சென்னை சென்றுள்ள மலிங்க சச்சினின் கருத்துக்கு அதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 25 ஓவர்கள் என தலா 2 இன்னிங்ஸ்களாக மொத்தம் 4 இன்னிங்ஸ் வைத்து போட்டியை நடத்த வேண்டுமென்ற சச்சினின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
பந்து வீச்சாளர் என்ற முறையில் தற்@பாதுள்ள விதிப்படி 34ஆவது ஓவரில் பந்தை மாற்றுவதை நான் ஏற்கவில்லை. 4 இன்னிங்ஸ் விளையாடினால் பந்தை பலமுறை மாற்ற வாய்ப்பு கிடைக்கும். இது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை சச்சினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அணியின் ராகுல் டிராவிட், இக் கருத்தை ஐ.சி.சி. நிராகரித்தது ஏன் என தெரியவில்லை என தெரிவித்தார்.


Brian-Lara_52

“கிரிக்கெட் உலகில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், “நவீன பிராட்மேனாக’ திகழ்கிறார்,” என, முன்னணி வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் தோனி, “கிழக்கும், மேற்கும் சந்திக்கின்றன’ என்ற விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். லண்டனின் “ஹில்டன் பார்க்’ என்ற இடத்தில் நடந்த இந்த விருந்தில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா, சச்சின் குறித்து கூறியது:
இந்திய வீரர் சச்சின், 16 வயதில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். தற்போது 38 வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இவரைப் போல சிறந்த வீரரை இதுவரை கண்டதில்லை. சச்சின் தான் உலகின் சிறந்த வீரர்.
லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின், 100வது சதம் அடிக்க இருப்பதை நேரில் காண உள்ளேன். சச்சின் சிறந்த வீரர் என்றார், அணியின் “பெருஞ்சுவர்’ டிராவிட். இவர் வியக்கத்தக்க வீரர்.
ஸ்டூவர்ட் (இங்கிலாந்து):
கடந்த 1990களில் சிறந்த வீரராக விளங்கியவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா. ஆனால் தற்போதைய கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் இந்திய அணியின் சச்சின், அவரை விட சிறந்தவர். சச்சின் “நவீன பிராட்மேன்’ ஆவார். அதிக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளையாடுவதில் டிராவிட் வல்லவர். எதிர்வரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்.
டிராவிட் (இந்தியா):
இந்தியா பல்வேறு கடவுள்களை கொண்டுள்ளது. இதில் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சினும் ஒரு கடவுளாக திகழ்கிறார்.



புது தில்லி,   பேட்டிங்கில் பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கரின், சாதனைகளை முறியடிப்பது எளிதானதல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதங்கள், ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனை என பல உலக சாதனைகளை உரிதாக்கிக் கொண்டுள்ள சச்சின், இப்போது 169 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதன் மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
எனக்குத் தெரிந்த வரையில் பாண்டிங், பவுச்சர், காலிஸ் ஆகியோரே டெண்டுல்கரின் சாதனையை நெருங்கமுடியும் என நினைக்கிறேன். இருப்பினும், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
டெண்டுல்கர் சாதனைகளின் சிகரம் என சைமண்ட்ஸ் புகழ்ந்துள்ளார்.
இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொடர், டெஸ்டிலும் முதலிடத்துக்கா போட்டி இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் இன்றைய போட்டி இன்னும் முக்கியத்துவம்வாய்ந்த ஒரு உலகசாதனை நிகழ்த்தப்பட்ட போட்டி.

அதுவும் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் 200 ஓட்டங்கள் பெற்று அதிக ஓட்டம் பெற்ற முதல் வீரராகவும் கிறிக்கற் வரலாற்றில் 200 ஓட்டங்களைப்ப பெற்ற முதல் வீரராகவும் திகழ்கிறார். இதுவரை ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் பெற்ற அதிக ஓட்டமாக இருந்த சிம்பாபே வீரர் சி.கே.கொவென்ரி மற்றும் பாகிஸ்தானின் சயீட் அன்வர் ஆகியோரின் 194  ஓட்டங்கள், இன்று சச்சினால் தகர்க்கப்பட்டது.

இதில் மற்றுமொரு சாதனையாக ஒரு ஒருநாள்இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் பெற்ற வீரராக சச்சின் விளங்குகிறார்.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில் ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடிகளாகக் களமிறங்கிய சேவாக் சச்சின் ஆரம்பம் முதலே ஓட்டக்குவிப்பில் வேகம்காட்டினர். ஆனால் 3.5 ஆவது ஓவரில் 9 ஓட்டங்களுடன் சேவாக் ஆட்டமிழக்க, அடுத்துக்களமிறங்கிய தினேஸ் கார்த்திக் சச்சினுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். 29 ஓவர்கள் நிலைத்து நின்ற இந்த ஜோடி 194 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டது. 79 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் கார்த்திக் ஆட்டமிழக்க அடுத்து வந்த யுசுப் பதான் 36 ஓட்டங்களைப் பெற்று 41வது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்தவேளையில் இந்தியா 300 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி தனது விஷ்வரூபத்தை அனைவருக்கும் காட்டியிருந்தார், 37 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.(7நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓடடங்கள் அடங்கலாக).

இறுதிவரை ஆட்டமிழக்காத சச்சினின் 200 (25நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓடடங்கள் அடங்கலாக)ஓட்டங்களுடன் இந்தியா 401 ஓட்டங்களை பெற்றது.

சச்சினி பிட்ச் மப்


 பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, அம்லா கிப்ஸ் ஜோடியுடன் தனது இன்னிங்சை ஆரம்பித்தது. 3வது ஓவரிலேயே பிரவீன் குமார் கிப்சை ஓய்வறைக்கு அனுப்பினார். அடுத்து துடுப்பெடுத்தாட வந்த வன் டி மெர்வ் அடித்தாட முற்பட்டு சீகிகரமே ஓய்வறை திரும்பினார். ஆனால் போட்டியை வெற்றிக்கு இட்டுச்செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹசிம் அம்லா ஆரம்பத்தில் சற்று நம்பிக்கையளித்தாலும் சிறீசாந்தின் பந்து வீச்சில்34 ஓட்டங்களைப் பெற்றவேளையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இணைந்த டிவில்லியர்ஸ், கலிஸ் ஜோடியும் நின்று பிடிக்கவில்லை, கலிசும் ஆட்டமிழக்க தனிமனிதனாக போராட்டத்தில் ஈடுட்ட டிவில்லியர்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காது 101 பந்துகளுக்கு 114 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவின் அதிகபட்ச இணைப்பாட்டமாக டி வில்லியர்ஸ், பானேல் ஜோடி பகிர்ந்து கொண்ட 77 ஓட்டங்கள் பதிவாகியது.

ஜே.பி டும்மினி,ஸ்ரெயின் ஆகியோர் ஓட்டமெதையும் பெறாமலும்,பீட்டர்சன்-9, பவுச்சர்-14, பார்னல்-18, லங்கர்வெல்ட்-12 ஆகிய சொற்ப ஓட்டங்ளையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் தென்னாபிரிக்கா 42.5 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக உலகசாதனைத் துடுப்பாட்டவிரர் சச்சின் தெரிவானார். அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற ரீதியில் வெற்றியீட்டியது.

இப்போட்டி முடிவில் சச்சினுக்கு சில்வர் துடுப்பு, மற்றும் அந்த மைதானத்தில் பார்வையாளர் அரங்குக்கு சச்சினின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தனது சாதனை பற்றி சச்சின் கூறுகையில் இந்தச்சாதனையை தான் தனது இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

சச்சின் 200 ஓட்டங்களைப் பெறும் போது அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் சச்சினுக்கு வாழ்த்துக்களைத் ருவிற்றர் மூலமாக தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் கிறிக்கற் வலைத்தளம் சார்பில் சச்சின் டெண்டுல்கருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனை விட, இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரே சிறந்த ஆட்டக்காரர் என்று புகழ்ந்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுபவர் டான் பிராட்மேன். தற்போது அவருக்கு இணையாக வைத்துப் புகழப்படுகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதத்தை நெருங்குவதால் அவர் பிராட்மேனுக்கு சமமானவராகக் கருதப்படுகிறார். இன்றைய பிராட்மேன் டெண்டுல்கர் என்று இங்கிலாந்து பத்திரிகை புகழாரம் சூட்டியிருந்தது.
ஆனால், ‘பிராட்மேனை விட டெண்டுல்கர் சிறந்தவர், கிரிக்கெட்டின் எல்லா காலக்கட்டத்திலும் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பிராட்மேனை சிறந்த வீரராக மக்கள் நினைக்கிறார்கள். அவரது பேட்டிங்கை நான் பார்த்ததில்லை. அதே நேரம் அவர் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க முடியாது.
பிராட்மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன். அவர் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆயிரக்கணக்கான ரன்களையும், டஜன் கணக்கில் சதங்களையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில் இன்னும் புதுமுக வீரர் போல் ரன்களை குவிக்க நினைக்கிறார்.
அவரது பேட்டிங்கை பார்க்கும்போது இளைஞர்போல் ஆடுவது தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். சரியான காலக்கட்டத்தில் அவர் பிறந்து இருப்பது அதிர்ஷ்டமே.
முதல் தர போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சதம் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற பெருமை எனக்கு உள்ளது. ஆனால் என்னால் 16 ஆண்டுகளில் 78 டெஸ்ட்டே ஆட முடிந்தது. 1970-ல் பிறந்து இருந்தால் மேலும் டெஸ்டில் விளையாடி இருக்கலாம். தவறான காலக்கட்டத்தில் நான் பிறந்ததாக நினைக்கிறேன்…”, என்றார்.
63 வயதான ஜாகீர்அப்பாஸ் 78 டெஸ்டில் விளையாடி 5062 ரன் எடுத்துள்ளார். 12 சதம் அடித்துள்ளார். 459 முதல் தரப் போட்டியில் விளையாடி 108 சதம் அடித்துள்ளார்.

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வு செய்யப்படவுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) வழங்கப்படும் இந்த விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
2009-10-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் சச்சினின் சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மும்பையில் வரும் 31-ம் தேதி நடைபெறும் பிசிசிஐ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின்போது சச்சினுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணியினரும் இந்த நிகழ்ச்சியின் போது கெüரவிக்கப்படவுள்ளனர்.
இதேபோல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படவிருக்கிறது. மே 31-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின் போது இந்த விருதைப் பெறுபவர் தேர்வு செய்யப்படுவார். விருதுடன் ரூ.15 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலும், உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களும் நிகழ்ச்சியில் கெüரவிக்கப்படவுள்ளனர். விருதுபெறும் மற்ற வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் அதிக ரன் குவித்த மணீஷ் பாண்டே, அதிக விக்கெட்டுகள் எடுத்த அபிமன்யு மிதுன் ஆகியோருக்கு மாதவராவ் சிந்தியா விருது வழங்கப்படுகிறது.
16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய அபராஜித், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பாக ஆடிய பார்கவ் மேராய், 22 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்த நடராஜ் பெஹேரா ஆகியோருக்கு எம்.ஏ.சிதம்பரம் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மகளிர் கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்புக்காக திருஷ்காமினி, ஜூனியர் மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையான ரேவா அரோரா ஆகியோருக்கும் எம்.ஏ.சிதம்பரம் விருது வழங்கப்படவுள்ளது.
பாலி உம்ரிகர் விருதை பெறவுள்ள சச்சின் 2009-10-ம் ஆண்டில் மட்டும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டைச் சதம், 5 சதங்களுடன் 1062 ரன்கள் குவித்தார். 12 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட 695 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
50வது சதத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என, சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

டெஸ்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த சாதனை குறித்து சச்சின் தெண்டுல்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சாதனையை நினைத்து கொண்டு நான் ஒரு போதும் ஆடுவதில்லை. 50 என்பது இன்னொரு சாதாரண நம்பர் தான். ஆனால் இந்த முக்கியமான தருணத்தில் சதம் அடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டிசம்பர் 18ம் தேதி எனது தந்தையின் பிறந்த நாள். எனவே இந்த சதத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை என்னால் விவரிக்க உண்மையிலே வார்த்தைகள் இல்லை' என்றார். இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியுமா? என்ற கேட்ட போது  நல்லதே நடக்கும் என்று நம்பக்கூடியவன் நான்.

தற்போது வைத்திருக்கும் இந்த பேட் மூலம் ஒரு நாள் போட்டி இரட்டைசதம் உள்பட 12 சதங்களை தெண்டுல்கர் அடித்திருக்கிறார்.
நல்ல விஷயங்களே நடக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அது போலவே நடக்கும்' என்றார்.

இது பற்றி குறிப்பிட்ட தெண்டுல்கர்,  இந்த பேட் எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த அதிர்ஷ்டம். இந்த பேட்டை வைத்து நான் பேட்டிங் செய்யும் போது என்னை அவுட் செய்வது கடினம் என்று நான் உணருகிறேன் என்றார்.


தெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  இது ஒரு அற்புதமான சாதனை. ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் பிரதமர் மன்மோகன்சிங், இது வியப்பூட்டும் சாதனை என்று பாராட்டியுள்ளார்.
ஐ.சி.சி. தலைவர் சரத்பவார்,  தெண்டுல்கர் எடுக்கும் ஒவ்வொரு ரன்களும் சாதனை தான். நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகுக்கு அவர் நிரூபித்து இருக்கிறார்' என்றார். 


இந்த சாதனையை எந்த வீரரும் நெருக்க முடியாது என்று முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.  உலக கிரிக்கெட்டின் கடவுள் தெண்டுல்கர் என்று தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் வர்ணித்தார். இதே போல் முன்னாள் வீரர்களும், பிரபலங்களும் தெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். 


prabakar
prabakar
prabakar
prabakar
prabakar
prabakar
prabakar
PRABAKAR